அரை மில்லியோன் ஊடகங்கள் உங்களுகாக காத்திருக்கின்றன

PBZ வருடாந்த சந்தாவினூடாக பலவிதமான ஊடகங்களை, அச்சிடப்பட்ட, இயந்திரவியல் ஊடகங்களையும் கெற்றுக்கொள்ளலாம். அத்துடன் உங்களுக்கு PBT நூலகத்தில் இதழ்கள், பத்திரிக்கை, வேலைசெய்வதற்கான இடங்கள், இணையத்தள நிலையங்கள், அதிவசதிகொண்ட இடங்களும் மேலும் பலசேவைகளும் உங்களுக்காக காத்திருக்கின்றன.

16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சுவிஸ் PBZ அமைப்பின் Pestalozzi நூலகத்தின் PBZ செல்லுபடியான வருடாந்த சந்தாவை பெற்றுக்கொள்ளலாம். சிறுவர்களும் இளையோர்களும் இலவசமாக சந்தாவை பெற்றுக்கொள்ளலாம்.  ஆனால் இவை வருடாந்தஅட்டையாக செல்லுபடியாகாது.

PBZ ன் சந்தா

அடிப்படையில் ஒரு சந்தாவினூடாக ஒரேநேரத்தில் 50 ஊடகங்களை கடனாகபெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இயந்திரவியல் ஊடகங்களையும் பாவித்துக்கொள்ளலாம்.

PBZ ஒளி

இச்சந்தாவுடன் அச்சிடப்படவையையும் இயந்திரவியல் ஊடகங்களையும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணம்: CHF 60 / வருடம்

PBZ பொதுவான சந்தா

இச்சந்தாவுடன் அச்சிடப்படவையையும் இயந்திரவியல் ஊடகங்களையும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் அத்துடன் திறந்த நூலகத்தையும் பாவித்துக்கொள்ளலாம்.

கட்டணம்: CHF 80 / வருடம்

PBZ அதிதிறன் சந்தா

இச்சந்தாவுடன் அச்சிடப்படவையையும் இயந்திரவியல் ஊடகங்களையும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் அத்துடன் திறந்த நூலகத்தையும் பாவித்துக்கொள்ளலாம். அத்துடன் முற்பதிவுக்கான கட்டணம் நீக்கப்படும், மேலும் கடனாகப்பெற்ற ஊடகத்தின் முதலாவது எச்சரிக்கைக்கு கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: CHF 160 / வருடம்

18 வயதுவரையான சிறுவர்களுக்கும் இளையோர்களுக்கும்

சிறுவர்களும் இளையோர்களும் இலவசமாக 18 வயதுவரை நூலகசந்தாவை பெற்றுக்கொள்ளலாம். இச்சந்தாவினூடாக PBZ நூலகத்தினால் வழங்கப்படும் ஊடகங்களை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தவிர 16 வயதிற்கு மேற்பட்டோர் திறந்தநூலத்தையும் பாவித்துக்கொள்ளலாம். சிறுவர்களும் இளையோர்களும் அவர்களது வயதுக்கு அனுமதிக்கப்பட்ட ஊடகங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணம் குறைக்கப்பட்ட சந்தாக்கள்

குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சந்தா இருக்குமாயின்:
25 % கட்டணம் தள்ளுபடி பொதுவான கட்டணத்திலிருந்து மேலும் நிவர்த்தியான சந்தாவிற்கு

கல்விபெறுபவர்கள், பாடசாலை மாணவர்கள், பயிற்சிபெறுபவர்கள்
(18 வயதிலிருந்து 25 வயது வரை), வேலையில்லாதவர்கள் அத்துடன் IV உதவி பெறுபவர்கள்:
50 % கட்டணம் தள்ளுபடி PBZ பொதுவான, PBZ ஒளி சந்தா கட்டணத்திலிருந்து

கலாச்சாரலெகி, அடையாள அட்டை A, N, S அல்லது Sans பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு:
இலவசமான PBZ பொதுவான சந்தா

3-மாத அட்டை

பயிற்சி பார்க்கும் அல்லது இலகுவான தற்காலிக நூலகஅட்டை

கட்டணம்: 33 % தெரிவுசெய்யப்பட்ட சந்தாவிலிருந்து

மேலதிக கட்டணங்கள்

  • Take-away-Bücher (வெளியே எடுத்துச்செல்லும் புத்தகங்கள்) CHF 3 / ஊடகம்
  • மேலதிக அட்டை CHF 5
  • முற்பதிவு CHF 5 / ஊடகம்
  • முழுமையற்ற திரும்பகொடுத்தல் (எழுத்துமூலம் அறிவித்தல்) CHF 3
  • ஒருதடவை கடன்பெறல்(திறந்த நூலகமும் E ஊடகமும் பெற்றுக்கொள்ள முடியாது) CHF 5 / ஊடகம்
  • ஊடகம் தொலைத்ததிற்கான வேலைகட்டணம் CHF 15

எச்சரிக்கை கட்டணம்  

  • எச்சரிக்கை CHF 5
  • எச்சரிக்கை CHF 10
  • எச்சரிக்கை CHF 25

நிறுவணங்கள்

விளையாட்டுக்குழு, பாலர்குழு, சிறுவர்பராமரிபு நிலையங்கள், ஊனமுற்றோருக்கான அத்துடன் வயோதிபர் நிலையங்கள் மொத்தமாக பதிந்து பாவனைசெய்யலாம். பாவனைக்கட்டணம் செலுத்ததேவையில்லை. (இவை பாடசாலை மற்றறு; சிறுவர்நிலையங்களுக்கு செல்லுபடியாகாது) ஆர்வமிருந்தால் உங்களது நூலகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

ஒரு சந்தா பரிசாக வழங்கலாம்

ஒரு PBZ-சந்தா பரிசாக வழங்க பொருத்தமான விடையம். குட்சைன் CHF 40, 50, 70, 95 அதைத்தவிர இயந்திரவியல் ஊடகம் பெறுவதற்கான வருடாந்தஅட்டையையிட்டிய பரிசு வழங்குவதற்கான துண்டுபிரசுரம் ஒவ்வொரு PBZ நூலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். சட்டஒழுங்கு காரணமாக நூலக சந்தாவை பரிசாகப்பெறுபவர் தானாகவே நூலகத்தில் பதிவுசெய்ய வேண்டும்.